தேனி : தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.பி.பி.எஸ் மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில், தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் மற்றும் ஊரக நலப் பணியாளர்கள் இணைந்து தேனி மாவட்டத்தின் நகர் மற்றும் கிராமப் புறங்களில் இயங்கி வரும் மருத்துவர்களின் கிளினிக்ககுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையில், தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாசில்தார் நகர் பகுதியில் முத்துகிருஷ்ணன் என்ற 60 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். அங்கு தேனி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்ட போது முறையாக எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து சான்றிதழ் பெறாமல் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், ஏமாற்றும் வகையிலும் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க :பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!