தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணைத்தேர்வர்களின் தட்கல் திட்டத்திற்கான கட்டணத்தில் விலக்கு.. காலக்கெடுவும் நீட்டிப்பு!

Supplementary Exam: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் துணைத் தேர்வினை எழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தட்கல் திட்டத்திற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை எனவும், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு 7-இல் இருந்து 15 நாட்களாக நீடிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

Supplementary Exam
பொதுத்தேர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:01 PM IST

Updated : Mar 6, 2024, 10:20 PM IST

சென்னை:இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி தேர்வு நடத்தப்படுகிறது.

குறிப்பிட்ட கால அளவுக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக 'தட்கல் திட்டத்தின்' கீழ் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், கடைசி நேரத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கின்றனர். இதனால் மாணவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

மாணவர்களுக்கு ஏற்படும் இந்த சுமையைக் கருத்தில் கொண்டு, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தால் கட்டணம் கிடையாது எனவும், தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கால அவகாசம் ஏழு நாளிலிருந்து 15 நாளாக அதிகரிக்கப்படுகிறது” என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீதான வழக்கு; சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Last Updated : Mar 6, 2024, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details