திருப்பயர்:கடலூர் மாவட்டம், திருப்பயரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 'அப்பா' என்ற செயலியை அவர் வெளியிட்டார். 'Aanaithu Palli Parent Teachers Association' என்பதன் சுருக்கமே 'APPA' என்பதாகும். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கல்வியை முதன்மையாக கற்பிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும் கூடியிருக்கும் மாநாடு இது. தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தைப் பார்த்து நாடே வியக்கிறது. தமிழ்நாடு அரசு செய்வது எல்லாமே சாதனை தான். அதில் கல்வித் துறையில் நிறைய சாதனைகளை செய்துள்ளோம். நான் ஆசிரியரும் அல்ல..மாணவரும் அல்ல.. நான் பெற்றோர்களில் ஒருவன். உங்களது மனதில் உள்ளதை உணர்ந்து செயல்படுத்தி வருகிறேன். திராவிட மாடல் என்பது பள்ளிகளை திறந்தோம். மாணவர்களை படிக்க வைத்தோம். மதிப்பெண் எடுக்க வைத்தோம். வெளியே அனுப்பினோம் என்பதோடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு முடிவடைந்து விடவில்லை. ஒவ்வொரு மாணவரும் அரசின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்த்து வருகிறோம்.
அமைச்சர் அன்பில் மகேஸுக்கு புகழாரம்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக செயல்படுகிறார். அவரது காலம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம். பள்ளிக் கல்வித்துறையை இந்தியாவின் 2-வது இடத்திற்கு உயர்த்தியவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 80,000 ஆசிரியர்களுக்கு கைக் கணினிகளை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகரித்துள்ளார். போட்டிகளில் வென்ற மாணவர்களை மட்டுமல்லாமல், ஆசிரியர்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பாராட்டு
தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துக் கூறுவதற்கான நல்வாய்ப்பு இந்த மாநாடு. அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் ஏராளமான நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் குறைந்த விலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பரிசுகள் வழங்கி பெற்றோர் ஆசிரியர் கழகம் கௌரவித்து வருகிறது.
அரசுக்கு கல்வியும் மருத்துவமும் இரு கண்கள்
தமிழ்நாடு அரசுக்கு கல்வி மற்றும் மருத்துவம் இரு கண்கள். இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களின் இடைநிற்றலை களையவே இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு பாராட்டு
தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு மனதார பாராட்டியுள்ளது. ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு ரூ.2,152 கோடி நிதியை தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை