தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு! - DMK NTK NOMINATIONS ACCEPT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்தது. திமுக, நாதக கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ்
தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 6:27 PM IST

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்தது. திமுக, நாதக கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி 20ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி கூறி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்பிரவரி 5ம் தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை முடிவில் மூன்று வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு.55 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ்,"20ம் தேதி 3 மணி வரை யாரெல்லாம் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கெடு முடிவடைகிறது. அதன் பின்னர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி செய்யும் நடைபெறும். திமுக, நாம் தமிழர் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் என மூன்று வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் மூன்று சின்னம் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு சின்னம் கொடுப்போம். பின்னர் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கப்படும். அப்போது ஒரே நேரத்தில் இரு சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே சின்னம் கேட்கும் போது குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

நாதகவுக்கு என்ன சின்னம்?: சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் 20ம் தேதி நடைபெறும். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மைக் சின்னம் கேட்டு உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு வரவில்லை. தற்போது தேர்தல் அலுவலர் சார்பில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்குவது என கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கின்றோம்.

தேர்தல் ஆணையம் பதில் வந்தவுடன் 20ம் தேதி என்ன சின்னம் என தெளிவான அறிவிப்பு இருக்கும். நாம் தமிழர் கட்சியினர் முதல் வேட்புமனுவில் கரும்பு விவசாயி சின்னமும் பின்னர் மைக் சின்னம் கேட்டு உள்ளனர். கரும்பு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தின் மூலம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த சின்னத்தை கொடுக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளின்படி 20ஆம் தேதி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். பிரச்சாரம் செய்ய முறையாக விதிமுறைகள் பின்பற்றி அனுமதி வழங்கப்படுகிறது. 48மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி கேட்க வேண்டும்,"என்றார்.

ABOUT THE AUTHOR

...view details