சென்னை:தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,நாடாளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதலமைச்சர். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?
’சொன்னதையும் செய்வேன் - சொல்லாததையும் செய்வேன்’ என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய முதலமைச்சர் அவர்களே மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.