தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது - ராணிப்பேட்டை மா.செ கொலை வழக்கில் அதிரடி நடவடிக்கை! - மக்கள் தேசம் கட்சி

Ranipet murder case: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் தேசம் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 4:57 PM IST

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், விவேகானந்தன். மக்கள் தேசம் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த இவர், கடந்த ஜனவரி 31ஆம் தேதி இரவு, 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா, காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த தீபிகாவின் கணவர் முருகன், திமுக மாவட்ட கவுன்சிலரின் மகன் பிரபாகரன், வினோத், குமார், சுரேஷ் ஆகிய 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வளர்மதி 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், நெமிலி அடுத்த புன்னை கிராமத்தில், டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பு என்ற சதீஷ் குமாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதை அடுத்து, இந்த 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக பிரமுகர்கள் 2 பேர் உள்பட ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது? - பணிப்பெண் விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details