தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்.. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு! - Lok sabha election 2024

election counting booth: வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளுக்கு தலா 2 கூடுதல் பார்வையாளர்களும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பார்வையாளர்கள் என தமிழகம் முழுவதும் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:31 PM IST

இந்திய தேர்தல் ஆணையம் கோப்புப்படம்
இந்திய தேர்தல் ஆணையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஏழாவது கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கூடுதாலாக ஆயிரத்து 707 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்திற்கு 57 கூடுதல் பார்வையார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கன்னியாகுமரி தொகுதிக்கு சேஷகிரிபாபு, பங்கஜ் குமார் சர்மா, சௌஜன்யா பரணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தென்சென்னையில் முகமத் சபிக் செக், முடாடா ரவிசந்திரா ஆகியோரும், வட சென்னையில் கார்த்திகே தண்ஜி புத்தாப் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோரும், மத்திய சென்னைக்கு டி.சுரேஷ், ஜித்தேந்திர ககுஷ்டே ஆகியோரும் கூடுதல் பாரவையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தருமபுரிக்கு அருணா ராஜோரியா, தூத்துக்குடிக்கு திவிஷ் சேஹாரா, விருதுநகருக்கு என்.என்.ஈகா, நாமக்கலுக்கு ஹர்குன்ஜித் கவுர், தேனிக்கு கௌரங்கபாய் ஹச் மக்வானா, கள்ளகுறிச்சிக்கு அசோக்குமார் கார்க், திருவள்ளுவருக்கு அபு இம்ரான், அரக்கோணத்திற்கு சுனில் குமார், ஆரணிக்கு சுசாந்த் கௌரவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, தென்காசிக்கு தோப்பேஷ்வர் வெர்மா மற்றும் அர்ச்சனா தாஸ் பட்நாயக், வேலூருக்கு உஜ்வால் போர்வல் மற்றும் ரூபேஷ் குமார், கிருஷ்ணகிரிக்கு கே.ஜி.வெஹிலா மற்றும் கிரண்குமாரி பசி, கோயம்புத்தூருக்கு வினோத் ஆர் ராவ் மற்றும் கிருஷ்ணா குணால், மதுரைக்கு சுபாஷ் சாந்தாராம் போர்கர், ராஜேஷ் குமார் யாதவ், திருச்சிராப்பள்ளிக்கு ராஜூவ் பிரசாத் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் கூடுதல் பார்வையாளராக நியமிக்கப்படுள்ளனர்.

அதேபோல், சிதம்பரத்திற்கு போஃர் சிங் யாதவ் மற்றும் டி.ராகேஷ், திண்டுக்கல்லுக்கு பிரபுலிங் கவலிகட்டி மற்றும் டி.சீனிவாச ராவ், ஈரோடிற்கு காயத்திரி என்.நாயக் மற்றும் ராஜூவ் ரஞ்சன் மீனா பொள்ளாச்சிக்கு அனுராக் சௌத்ரி, நிதிஷ்குமார் தாஸ் ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி தொகுதிக்கு கூடுதல் பார்வையாளராக சோனாலி பொங்ஷே வயங்கா என்பவரும், சேலத்திற்கு ஜி.பி.பாட்டில் என்பவரும், மயிலாடுதுறைக்கு கன்னுராஜ் ஹச்.பகட்டே என்பவரும், கரூர் தொகுதிக்கு ராகுல் அசோக் ரேக்காவர் என்பவரும், கடலூருக்கு தரேப் இம்சன் என்பவரும், நீலகிரிக்கு மஞ்ஜித் சிங் பரார் என்பவர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மக்களைவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதையும் படிங்க:தேர்தல் 2024: புதுச்சேரி கோட்டையில் வெற்றிக்கொடி ஏற்றுமா காங்கிரஸ்? கோட்டையை தகர்க்குமா பாஜக?

ABOUT THE AUTHOR

...view details