ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வின்சென்ட் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு நாள்தோறும் நிலம் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று (ஜூன் 10) மாலை அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைவு வாயில், வெளிப்புறக்கதவு மற்றும் அலுவலக கதவுகளை மூடி பூட்டியுள்ளனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு முகவர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த நபர்கள் உட்பட பலர் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.