தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீர் சிக்னல் கோளாறால் ஸ்தம்பித்த அரக்கோணம் ரயில் நிலையம்!

அரக்கோணம் ரயில் நிலையத்தின் 3 மற்றும் 4வது நடைமேடைகளில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் காலை 6 மணி முதல் மதியம் 9 வரை ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் ரயில் நிலையம்
அரக்கோணம் ரயில் நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 3:54 PM IST

Updated : Oct 30, 2024, 4:20 PM IST

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள 3 மற்றும் நான்காவது நடைமேடையில் சென்னை நோக்கிச் செல்லும் வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால், ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் ரயில்கள் அடுத்தடுத்து நடைமேடைகளில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சிக்னல் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள்:இந்த சிக்னல் கோளாறு காரணமாக, திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய காலை 6 மணி ரயில் முதல் 9 ரயில் வரை, அமைத்து ரயில்களும் ரயில் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு பணிகளுக்காக சென்னை நோக்கிச் செல்ல வேண்டிய பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பயணிகள், அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை முதல் மின்சார ரயில்கள் இயக்கம்

சீர் செய்யபட கேப் சிக்னலிங்:இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் உள்ள கேப் சிக்னலிங்கில் கோளாறு ஏற்பட்டது காரணமாக, மூன்று மற்றும் நான்காவது நடைமேடைகளில் உள்ள சிக்னல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இவை ஒரு மணி நேரத்துக்குள் சீர் செய்யப்பட உள்ளது. சீர் செய்த பின் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக ரயில்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்” என்றார். இந்நிலையில், இந்த கேப் சிக்னலிங் கோளாறு காலை 9.00 மணிக்கு சீர் செய்யப்பட்டு அடுத்தடுத்து ரயில்கள் அனுப்பப்பட்டன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 30, 2024, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details