தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடும் வறட்சி எதிரொலி: விலங்குகளை பாதுகாக்க தொட்டியில் தண்ணீர்.. குடித்து மகிழ்ந்த யானைகள் வீடியோ! - Sathyamangalam forest - SATHYAMANGALAM FOREST

Sathyamangalam forest Elephant: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்புமாறு வனத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Water facility for animals in Sathyamangalam
வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பிய ஊழியர்கள் (Credit - ETV bharat tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 2:29 PM IST

தொட்டியில் தண்ணீர் குடித்த யானைகள் (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் என இரு கோட்டமாக பிரிக்கப்பட்டு சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீரஹள்ளி, கேர்மாளம், கடம்பூர், டிஎன் பாளையம் என 10 வனச்சரகங்கள் செயல்படுகின்றன. 1455 சதுர கிலோ மீடடர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானைகள், மான்கள், காட்டெருமை, கழுத்தைப்புலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்த வனவிலங்களுக்கு மாயாறு, பவானி ஆறு, குளம் குட்டைகள் நீராதாரமாக உள்ளது. வனவிலங்குகளுக்கு செயற்கை தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின்படி வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்புமாறு வனத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேடர் கண்ணப்பர் வேட்டை தடுப்பு முகாம் அருகே உள்ள தொட்டியில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதால் காட்டு யானைகள் கூட்டத்துடன் அப்பகுதியில் முகாமிட்டு தண்ணீரை தும்பிக்கையால் உறிஞ்சி குடித்தும் உடல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளித்தும் மகிழ்ந்தன.

தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். செயற்கை தொட்டிகளில் நிரப்பப்படும் தண்ணீர் போதுமானதாக இருக்காது. மேலும் யானையின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது என்றும், கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் எதிர்காலம் கேள்கி குறியாகி உள்ளதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் விஷ ஜந்துக்களின் சிலை உடைக்கும் விநோத திருவிழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - Ayya Kovil Festival

ABOUT THE AUTHOR

...view details