தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரியாக மாறிய விவசாய நிலம்! விளையும் பயிர் வெள்ளத்தில் மூழ்கிய சோகம் - MAYILADUTHURAI FARM LAND DESTROYED

தரங்கம்பாடி நல்லாடை சோதனை சாவடி அருகே நல்லாடையாற்றில் ஏற்பட்ட உடைப்பால் நான்கு ஊராட்சிகளில் 2500க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெள்ள நீரில் மூழ்கிய விவசாய பயிர்கள்
வெள்ள நீரில் மூழ்கிய விவசாய பயிர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

மயிலாடுதுறை:வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள், வாய்க்கால்கள் முழு கொள்ளவை எட்டிய நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் விளைவாக தரங்கம்பாடியில் உள்ள நண்டலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரை வழிந்தது. அப்போது காவல் சோதனை சாவடி அருகே உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் நல்லாடை, கொத்தங்குடி, விளாகம், அரசூர் ஊராட்சிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 5000 ஏக்கர், சம்பா செய்துள்ள 2500 ஏக்கர் வெள்ள நீரில் மூழ்கியது. விவசாய நிலத்தில் இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளதை கண்டு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயி வேல்முருகன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இது குறித்து பேசிய விவசாயி வேல்முருகன், “மங்கைநல்லூர், மலக்குடி, எடக்குடி, பெரம்பூர், சேத்தூர் வழியாக வாய்க்கால்களிலிருந்து வடிந்து வரும் வெள்ள நீர் எங்கள் பகுதியில் செல்லும் கோனேரிபிள்ளை வாய்க்கால் வழியாக நண்டலாற்றில் கலக்கும். இந்நிலையில் இவை கனமழையால் ஏற்பட்ட உடைப்பால் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.

இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைவு.. சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல அனுமதி! - WATER FLOW IN THAMIRABARANI RIVER

இந்த வெள்ள நீரால் கதிர் வரும் தருவாயில் உள்ள பயிர்கள் மூழ்கி விவசாய நிலங்கள் முழுவதும் ஏரி போல் காட்சியளிக்கின்றன. ஏக்கருக்கு ரூபாய் 30,000 வரை செலவு செய்து பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளது வேதனை அளிக்கிறது. வீட்டில் வைத்திருந்த நகைகளை அடகு வைத்து, விவசாயம் செய்கிறோம் அரசு இதற்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

ஆண்டுதோறும் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்திலும் தற்போதைய திமுக ஆட்சிக்காலத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உடனடி நிவாரணம் தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டிகிறோம் ஆனால் தேவைப்படும் நேரத்தில் சேததிற்கெற்ப நிவாரணம் தரப்படுவதில். தண்ணீர் வடிய 15 நாட்களுக்கு மேல் ஆகும். தொடர்ந்து மழை பெய்ந்தால் பயிர்கள் சுத்தமாக அழுகி விடும். உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details