தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையில் தகராறு செய்த மூத்த மகன் கொலை; அப்பா, இளைய மகன் கைது! - chennai murder - CHENNAI MURDER

chennai murder: மதுரவாயலை அடுத்த வானகரம் பகுதியில் மூத்த மகன் போதையில் தகராறு செய்ததால், அவரை அவரது தந்தை மற்றும் இளைய மகன் கொலை செய்து உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரவாயல் காவல் நிலையம் புகைப்படம்
மதுரவாயல் காவல் நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 5:14 PM IST

சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி (60). இவரது மூத்த மகன் விஜய்(35), இளைய மகன் அஜய்(26) மூத்த மகன் விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், அவரது மனைவி ஒரே மாதத்தில் பிரிந்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் மூத்த மகன் விஜய் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாகி வீட்டில் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விஜய் வீட்டிற்கு போதையில் வந்ததாகவும், அப்போது அவர் தனது தந்தை ஆசைமணி மற்றும் தம்பி அஜய் ஆகியோருடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை ஆசைமணி மற்றும் தம்பி அஜய் இருவரும் சேர்ந்து விஜயை கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக தெரிகிறது.

பின்னர் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது கொண்டு சென்று எரித்து விடலாம் என்று திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் செட்டியார் அகரம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாட்டுப் பகுதிக்கு சடலத்தை கொண்டு சென்று, சுடுகாட்டில் வைத்து விஜய் சடலத்தை எரித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, செட்டியார் அகரம் சுடுகாட்டில் மர்மமான முறையில் சடலம் ஒன்று எரிக்கப்படுவதாக தொலைபேசி வாயிலாக தகவல் கிடைத்த நிலையில், மதுரவாயல் போலீசாருக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை தொடர்ந்து செட்டியார் அகரம் சுடுகாட்டிற்கு மதுரவாயல் போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு எரிந்த நிலையில் கிடந்த விஜய்யின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில் வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி மற்றும் அவரது இளைய மகன் அஜய் இருவரும் சேர்ந்து மூத்த மகன் விஜயை உருட்டு கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததுடன், சடலத்தை சுடுகாட்டில் வைத்து எரித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தந்தை ஆசைமணி மற்றும் இளைய மகன் அஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். போதையில் தகராறு செய்த மூத்த மகனை தந்தையும், அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்து விட்டு சடலத்தை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் தங்கையை வாயிலேயே வெட்டிய அண்ணன்.. சென்னையில் பயங்கரம்! - Brother Attack Sister on Love Issue

ABOUT THE AUTHOR

...view details