தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் மண் என் மக்கள்' நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.. திருப்பூரில் டிரோன்கள் பறக்கத் தடை! - En Mann En Makkal Yatra

En Mann En Makkal Yatra PM Modi Participate: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

ட்ரோன்கள் பறக்க தடை
drones-banned-in-tiruppur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 9:06 PM IST

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், மாதப்பூரில் வருகின்ற 27ஆம் தேதி பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள 'என் மண் என் மக்கள் யாத்திரை' நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

இதற்கான பணிகள் மாதப்பூர் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய நிலையில், சூலூருக்கு விமானம் மூலம் வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தர உள்ளார்.

இதற்காக, மாநாடு நடக்கும் மைதானத்தில் 3 ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சூலூர் விமானப்படை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் சோதனை முறையில் கொண்டுவரப்பட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் இறக்கி முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் மைதானம் முழுவதும் மத்தியச் சிறப்புப் பாதுகாப்புப் படை போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் 16 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், மாநாடு நடைபெறும் 27ஆம் தேதி பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்லக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிரோன்கள் பறக்கத் தடை:பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஓட்டி பாதுகாப்பு நடவடிகை காரணமாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், வருகிற 26 மற்றும் 27ஆகிய நாட்களில் எவ்வித டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Civil Remotely Piloted) பறக்க விடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

என் மண் என் மக்கள் யாத்திரை:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 'என் மண் என் மக்கள்' எனும் யாத்திரையைத் தொடங்குவதாக அறிவித்தார்.

அதன்படி, கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இதன் தொடக்கவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு யாத்திரை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற இந்த யாத்திரை வருகின்ற 27ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் தான் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:மன் கி பாத் நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது - மோடி சொன்ன காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details