தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் கனிவான கவனத்திற்கு.. "மன்னார்குடி விரைவு ரயில் தாமதமாக புறப்படும்!"

கனமழை காரணமாக ரயில் தண்டாவளங்களில் மழைநீர் தேங்கியதால், மன்னார்குடி விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - Getty IMAGES)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 5:27 PM IST

சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு (நவ.30) கடல் கரையை கடந்த நிலையில், அனைத்து மாவட்டகளும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக, தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள் நிரம்பி சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் ஓடும் நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி கோட்டத்திற்குட்பட்ட ரயில் சேவைகள் இன்று( டிச.2) ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எக்மோர் - மன்னார்குடி விரைவு ரயில் (வண்டி எண் : 16179) இன்றிரவு ( டிச 2) இரவு ஒரு மணி நேரம் தாமதமாக, சென்னை எக்மோரில் இருந்து 23.55 புறப்பட்டு, வழக்கமான வழித்தடத்தில் இயங்கும்.

இதையும் படிங்க :புயல் பாதிப்பால் இன்று ரயில்கள் ரத்து! இதோ ரத்தான ரயில்களின் பட்டியல்...

சென்னை எக்மோர் - திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் வண்டி (எண் : 20605) இன்று மாலை 16.10க்கு சென்னை எக்மோரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, விழுப்புரத்தில் இருந்து புறப்படும். சென்னை எக்மோரில் இருந்து விழுப்புரம் வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ஃபிரோஸ்பூர் - ராமேஸ்வரம் ஹம்சஃபர் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20498) மாற்று தடத்தில் சென்னை எக்மோரில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய வழித்தடங்களில் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details