தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிஷீல்டு போட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? - மருத்துவர் கதிரொளி கூறிய விளக்கம்! - covishield vaccine issue - COVISHIELD VACCINE ISSUE

Covishield Vaccine Issue: நாடு முழுவதும் கரோனா நோய்தொற்று பரவிய நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற இருவிதமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், சமீப காலமாக மாரடைப்பு மரணங்கள் நிகழ்ந்து வருவதற்கு கோவிஷீல்டு தடுப்பூசி தான் காரணம் என சமூக வலைதளத்தில் பரவி வரும் கருத்திற்கு மருத்துவர் கதிரொளி விளக்கம் அளித்துள்ளார்.

Covishield Vaccine Issue
மருத்துவர் கதிரொளி (Photo Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 2:07 PM IST

தடுப்பூசி தொடர்பாக மருத்துவர் கதிரொளி அளித்த விளக்கம் (Video Credit - Etv Bharat Tamil Nadu)

திருச்சி:உலகம் முழுவதும் கரோனா (Coronavirus) என்ற பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்து பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. அப்போது, கரோனா என்ற கொடிய வைரஸில் இருந்து மக்களைக் காக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் (Bharat Biotech) கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு 3 டோஸ்கள் வீதம் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பகிர்ந்து அளிக்கப்பட்டன. தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பிரிட்டன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா மீது இங்கிலாந்து நாட்டு நீதிமன்றத்தில் 51‌க்கும் மேற்பட்ட வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்குகள் தொடர்பாக நிறுவனம் அளித்த பதில் மனுத்தாக்கலில், "தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் காரணமாக திராம்போசைட்டோ பேனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) எனப்படும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனால் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என உண்மையை ஒப்புக் கொண்டது.

ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தால் இந்தியர்கள் உள்ளிட்ட கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் சமூக வலைத்தலத்தில் வைரலாகி மக்களிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?, எதனால் மாரடைப்பு வருகிறது? என திருச்சி உறையூர் சாலையில் அமைந்துள்ள கதிர் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் கதிரொளி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் கதிரொளி கூறுகையில், "கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மாரடைப்பு வருகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. இது கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா காலகட்டத்தில் நாம் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 விதமான தடுப்பூசியை எடுத்துக் கொண்டோம்.

கோவாக்சின் VS கோவிஷீல்டு: கோவிஷீல்டு வெளிநாட்டிலும், கோவாக்சின் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டதாகும். கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு 98 சதவீதம் பாதுகாப்பு அதிகம், கோவாக்ஸின் செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதுகாப்பு 80 சதவீதமாக இருந்தது. கோவாக்சின் என்பது இன்ஆக்டிவேட்டட் வைரஸ் வேக்சின். போலியோ ரேபிஸ் ஊசிகளை போன்று ஒரு வைரஸை இன்னாக்டிவேட் செய்து அதை நமது உடம்பில் செலுத்துகின்றோம். இந்த தடுப்பூசி நமது உடலில் ஆக்டிங் வைரஸ் வராமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும்.

கோவிஷீல்டு என்பது புதிய தொழில்நுட்பம் சார்ந்ததாகும். ஒரு வைரஸிலிருந்து குறிப்பிட்ட புரோட்டினை நமது செல்களுக்குள் அனுப்பும் ஒரு தடுப்பூசியாகும். இது கரோனா தொற்றிலிருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை நமது உடலுக்கு கொடுக்கும். கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பிறகு நிறைய மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வருவதற்கு காரணம் இந்த தடுப்பூசி நமது உடலில் தட்டணுக்களைக் குறைக்கும்.

மாரடைப்பு ஏற்படக் காரணம்?: ரத்தம் உறைவதற்கு உண்டான தட்டணுக்களைக் குறைப்பதால் (டிடிஎஸ்) திராம்போசைட்டோ பேனியா சிண்ட்ரோம் உருவாகிறது. தட்டணுக்கள் குறைவதால் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட 21 நாட்களுக்குள் மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, பின்னாளில் இது போன்ற நோய்கள் வர வாய்ப்பில்லை. அதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. சுமார் 1 லட்சம் பேருக்கு 2.6 சதவீதம் பேருக்கு இது போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இதயநோய், உடல்நலமின்றி படுகையில் இருந்தவர்கள், உடல் பருமனாக இருந்தவர்கள் ஆகியவர்களுக்கு வர வாய்ப்புள்ளது எனவும், 2வது மற்றும் 3வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பிரச்சனைகளுக்கான சதவீதம் குறைவு என அந்நிறுவனம் சார்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாரடைப்பு வருமா? எனப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இதுகுறித்து நாம் உடல் பரிசோதனை செய்து கொள்வதிலும் அவசியம் இல்லை. பரிசோதனை செய்து கொள்வதால் 100 சதவீதம் நமது ரத்த ஓட்டம் சீராக உள்ளதா, ரத்த அணுக்கள் எவ்வாறு உள்ளது, ரத்தம் எப்போது உறையும், உறையாது என்பது தெரியாது. சிறிய பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டால் நோய் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என பயப்பட வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அழுகிய நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு; கொலையா? தற்கொலையா? என விசாரணை..சேலம் அருகே பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details