சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, தொகுதி பங்கீட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று கூட்டணிக் கட்சிகளுடன் திமுக இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு; கூட்டணி கட்சிகளுடன் திமுக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைமை அலுவகத்தில் இன்று மாலை கூட்டணி கட்சிகள் உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம்
Published : Feb 24, 2024, 11:45 AM IST
இன்று மாலை திமுக - மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதற்காக மாலை 5.30 மணி அளவில் திமுக பேச்சுவார்த்தை குழு உடன் மதிமுக பேச்சுவார்த்தை குழு சந்திக்க உள்ளனர். அதற்கு முன்னதாக, மாலை 4.30 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.