சென்னை: 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' – 'DMKManifesto2024' என்று பெயரில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அறிக்கை தயாரிக்கும் குழுவை, திமுக தலைமையால் அமைக்கப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும், பல்வேறு தரப்பினரைச் சந்தித்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
இன்று (மார்ச் 17) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக தலைமை செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மதுரை மாவட்டத்தில் 26.77 லட்சம் வாக்காளர்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்