சென்னை:நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget) பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், நிதுத்துறை, வேளாண்மை, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, நிதித்துறை, வரி, முதலீடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, பட்ஜெட்டில் “தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லையே” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்ஜெட் “பீகார் மாநில பட்ஜெட் போன்று உள்ளது” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, “ மத்திய பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது” என்று டெல்டா விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.