தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பிரதமருக்கு ஸ்டாலின் போட்ட கும்பிடு.. சுதியை மாற்றிய ஆளுநர்'.. சிவி சண்முகம் பளிச்!

திமுகவும், பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி விமர்சித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சி.வி. சண்முகம் எம்.பி
சி.வி. சண்முகம் எம்.பி (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:அண்மையில் சேலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ரவி, வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்யும் என வானிலை தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது என்றார்.

தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆளுநர் ரவி தமிழக அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வருவதாக திமுகவினர் எதிர்வினையாற்றி வரும் சூழலில், ஆளுநரின் இந்த பேச்சு சற்று வியப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்றைய தினம் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆளுநருக்கு மனமாற்றம் வந்திருக்கிறது. தொடர்ந்து இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் அதை தான் வரவேற்கிறேன் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:அதிமுகவுக்கு பேக் ஃபயராகும் அப்பாவு வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்த நிலையில், அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று (அக்.17) மாவட்டச் செயலாளரான சி.வி. சண்முகம் எம்.பி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக சீரும் சிறப்புமாக உள்ளதால், 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details