வேலூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்களிடையே சென்று பல்வேறு வகையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ் வலைத்தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவை மூலம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்களிடம் குரல் பதிவில் பேசுவது போல், வாக்காளர்களிடையே வாக்குகள் சேகரிக்கின்றனர்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அரசின் நலத் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கச் செய்வேன் என்று கூறியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறியும் வாக்கு சேகரிக்கின்றனர்.
இதையும் படிங்க:4 நாட்களாகப் போக்குகாட்டும் சிறுத்தை.. இறைச்சியுடன் காத்திருக்கும் வனத்துறையினர்: மீண்டும் அதே பகுதிக்குச் சிறுத்தை வருமா? - AROKIYANATHAPURAM Leopard Issue