தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வெற்றியை கணிக்க முடியாத 3 தொகுதிகள்? - three Lok Sabha constituencies - THREE LOK SABHA CONSTITUENCIES

DMK is determined to ensure victory: 39 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 36 தொகுதிகளில் வெற்றியை திமுக உறுதி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:45 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவிற்கு இடையே இன்னும் ஒரு நாள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 36 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்து விட்ட திமுக, மீதமுள்ள நான்கு தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யக் கடுமையாக முயற்சித்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தேனி தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது, தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதி உட்பட 39 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 36 தொகுதிகளில் வெற்றியை திமுக உறுதி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கோவை, ஈரோடு, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே முன்னிலை வகித்து இருப்பதாகத் தெரிய வரும் நிலையில், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு எதிராகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தருமபுரி, கள்ளக்குறிச்சி, தேனி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக மற்றும் அங்கு போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாகத் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி களத்தில் கடுமையான நெருக்கடியை திமுகவிற்கு கொடுத்து வருகிறார். அங்கு போட்டியிடும் அதிமுக மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இருந்தாலும் கூட திமுக மற்றும் பாமக இடையே கடுமையான போட்டி நீடித்து வருகிறது.

அதேபோல், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் மலையரசன் மற்றும் அதிமுக வேட்பாளர் குமரகுரு இடையே வெற்றியைத் தீர்மானிக்கக் கடுமையான போட்டி நிலவி வருகிறது, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வரக்கூடிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிடக்கூடிய டிடிவி தினகரன் மற்றும் திமுக சார்பில் போட்டியிடக் கூடிய தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடுமையான போட்டி தற்போது வரை நீடித்து வருகிறது. ஏற்கனவே, இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய டிடிவி தினகரனுக்கு சமுதாய வாக்குகள் பலமாக பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் இடையே வெற்றியைத் தீர்மானிக்க உச்சக்கட்ட போட்டி நிலவி வருகிறது.

இதையும் படிங்க:இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details