சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று (மார்ச் 10) வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பானது, ஐ.டி.விங் உருவாக்கி, அதற்கான நிர்வாகிகள் நியமனம், கட்சியின் செய்தித் தொடர்பாளர் நியமனம், தேமுதிக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் 10 பேர் கொண்ட பட்டியல் உள்ளிட்டவைகள் ஆகும்.
இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒரு நொடிக்குள் உலகையே உள்ளங்கையில் பார்க்க வைக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்ஃபுக், இன்ஸ்டகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் சாதனையை செய்து வருகின்றன. தேமுதிகவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் விதமாக தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேமுதிக சமூக வலைதள அணி செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ S.செந்தில்குமார் மற்றும் சமூக வலைதள அணி துணைச் செயலாளர்களாக R.அரவிந்தன், K.V.மகேந்திரன், A.தமிழரசன், சிவக்குமார் நாகப்பன், B.A.BL ஆகியோர், இந்த ஐ.டி.விங்கின் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து, தேமுதிக செய்தித் தொடர்பாளராக M.V.S. ராஜேந்திரநாத் நியமிக்கப்படுகிறார். மேலும், தேமுதிக சார்பில் தொலைக்காட்சிகளில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க, 10 பேர் கொண்ட தொலைக்காட்சி விவாதக்குழுவினர் நியமிக்கப்படுகிறார்.
அவர்கள், கட்சி அவைத்தலைவர் டாக்டர். V.இளங்கோவன், கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் R.மோகன்ராஜ், கழக துணைச்செயலாளர் B.பார்த்தசாரதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் A.R.இளங்கோவன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் L.வெங்கடேசன், கழக தேர்தல் பணி குழு செயலாளர் பேராசிரயர் C.மகாலெட்சுமி, கழக இளைஞர் அணி செயலாளர் கு.நல்லதம்பி, கழக செய்தித் தொடர்பாளர் M.V.S.ராஜேந்திரநாத், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.சிவக்கொழுந்து, சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர், சுபாரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேமுதிக வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் என கட்சி தலைமை நிவாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மகளிர் தினத்தையொட்டி, பெண் போலீசாருக்கு விடுமுறை..! - கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்