சென்னை: திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று உயிரிழந்தார். அதற்கு முன்னதாகவே, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிப்.7-இல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! - பிரேமலதா விஜயகாந்த்
DMDK District secretaries meeting: வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
Published : Feb 2, 2024, 10:11 PM IST
இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பிப்ரவரி 7 அன்று காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, யாருடன் கூட்டணி என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:விஜயின் அரசியல் யாரை எதிர்க்கிறது? யாருடைய ஓட்டுக்கு வேட்டு?