தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை அடுத்த பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் என்கிற மூதாட்டி. மாற்றுத்திறனாளியான இவர் குடிசை விட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது.
தங்களின் புதிய வீட்டிற்காக மின் இணைப்பு வேண்டி சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், மின் வாரிய அலுவலர்கள் மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைத்து, மின் கம்பிகள் இழுக்க வேண்டும் எனக் கூறி, அதற்கு 58 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதற்காக தான் வைத்திருந்த நகைகளை விற்று மின்வாரியம் கோரிய பணத்தை கட்டியதாக பொன்னம்மாள் தரப்பில் கூறப்படுகிறது. அதனை அடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்னர் மூதாட்டி பொன்னம்மாள் வீடு கட்ட தேர்வு செய்துள்ள இடத்தின் அருகே மின் கம்பத்தையும், அது சாயாமல் இருப்பதற்காக துணை கம்பத்தையும் மின் வாரிய அதிகாரிகள் நட்டுள்ளனர். ஆனால், அந்த துணை கம்பம் பொன்னம்மாளின் வீடு கட்ட தேர்வு செய்த இடத்திற்குள் நடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!