சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.