திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுபாஷ் என்பவரின் உணவகத்தில் இன்று (ஜூலை 12) இட்லி வாங்கி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, உணவகத்தில் வாங்கி வந்த உணவை சுபாஷின் குடும்பத்தில் 3 குழந்தைகள் உட்பட உறவினர்கள் என 8 பேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுபாஷ் வாங்கி வந்த இட்லியில் பார்த்த போது, அதில் உயிரிழந்த நிலையில் பல்லி இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.