தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; சேதமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கை புதுப்பொலிவுடன் மாற்றம்! - govt bus driver seat replaced

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 10:52 PM IST

Govt bus driver seat replaced: ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பின்புற இருக்கை பலகையுடன் வைத்து கட்டப்பட்டது குறித்து ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, பேருந்துக்கு புதிய இருக்கை அமைத்து அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாற்றப்பட்ட ஓட்டுநர் இருக்கை (வலது)
மாற்றப்பட்ட ஓட்டுநர் இருக்கை (வலது) (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் வரை அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணிக்கும் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் இருக்கை பலகை வைத்து கட்டப்பட்டிருக்கும் செய்தி கடந்த ஜூலை 11ஆம் தேதி ஈடிவி பாரத் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. கடம்பூர் மலைப்பாதையானது 15 கி.மீ தூரம் குறுகிய வளைவுகளைக் கொண்டது. அதுமட்டுமின்றி, 300 அடி மலைச்சரிவாக உள்ளது.

இந்நிலையில், மலைப் பாதையில் பேருந்து ஓடும்போது ஓட்டுநரின் இருக்கை பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், அதேபோல் பேருந்தின் டியூப்லைட் பழுதடைந்து பல நாட்கள் ஆனதால் பயணிகள் இரவு நேரத்தில் இருட்டில் பயணிக்க வேண்டிய அவல நிலை குறித்தும் ஈடிவி பாரத்தில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர் ராஜகோபல் சுங்கரா பேருந்தை சீரமைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் கேர்மாளம் செக் போஸ்ட் பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்குட்படுத்தி புதிய வர்ணம் பூசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பழுதுகள் நீக்கப்பட்டு, சேதமடைந்த ஓட்டுநர் இருக்கை மாற்றப்பட்டு புதிய இருக்கை போடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சீட்டுக்கே சீட் பெல்ட்.. கேர்மாளம் அரசுப் பேருந்தின் அவல நிலை! - Erode Kermalam Government Bus Video

ABOUT THE AUTHOR

...view details