தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 6 பேர் காயம்! - Nellai Tea shop blast - NELLAI TEA SHOP BLAST

Cylinder Explosion: திருநெல்வேலி டவுன் ரத வீதியில் உள்ள டீக்கடையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நெல்லையில் டீ கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து
நெல்லையில் டீ கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து (Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 7:35 PM IST

Updated : May 30, 2024, 9:17 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இக்கோயில் திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி நான்கு ரத வீதிகளில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.

டீக்கடையில் சிலிண்டர் விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு சமோசா கடையில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஷேக் அலி என்பவர் திருநெல்வேலி வடக்கு ரத வீதியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மாரியப்பன் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், இன்று (மே 30) மாலை சமோசா செய்து கொண்டிருக்கும்போது, திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தீ பிடித்த நிலையில், சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அங்கு இருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் மற்ற கடைகளில் தீ பரவால் கட்டுப்படுத்த முடிந்தது. இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருநெல்வேலியின் பரபரப்பான பகுதியில் சமோசா கடையில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நிலத்தகராறில் கூலி ஆட்களை ஏவி குடும்பத்திற்கு மிரட்டல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Ex Servicemen Threatened In Vellore

Last Updated : May 30, 2024, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details