தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வு வரக் காரணம் சங்கல்ப் இயக்கமும், பாஜகவும் தான்' - செல்வப்பெருந்தகை - Selvaperunthagai

Congress State President Selvaperunthagai: நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் என்ற பாஜக தலைவர்கள் விமர்சித்த நிலையில், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கிடையாது என்றும் பாஜகவும், சங்கல்ப் இயக்கமும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீட் தேர்வை இந்தியாவில் கொண்டு வந்ததாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 11:57 AM IST

செல்வப்பெருந்தகை, மோடி ஆகியோரது புகைப்படம்
செல்வப்பெருந்தகை, மோடி ஆகியோரது புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

பெரம்பலூர்:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, 'காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்த ஓட்டு விகிதத்தை, தற்போது காங்கிரஸ் கட்சியில் கொண்டு வர வேண்டும். அதற்காக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கண்டிப்பாக உழைத்து வாக்கு வங்கியை அதிகரிக்க பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வை (NEET Exam) காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது எனக் கூறி வருகின்றனர். அது உண்மை அல்ல. சங்கல்ப் இயக்கமும், பாஜகவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீட் தேர்வை இங்கு கொண்டு வந்தன. இதற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அண்ணாமலை கற்பனையின் அடிப்படையில் பேசி வருகிறார். அமலாக்கத்துறையை வைத்து அனைவரையும் மிரட்டி விடலாம் என நினைக்கிறார்.

அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டவர்கள், தற்பொழுது வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடுவார்கள். அப்போது அண்ணாமலைக்கு இது பற்றி தெரியும். மேலும், அவர் அனைவரையும் மிரட்ட அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, வருமானவரித்துறையை அனுப்ப நினைக்கிறார். இதனால், எதுவும் நடக்காது. எனவே, தமிழக பாஜக தலைவர்கள் இதுபோன்ற மனிதாபிமானமற்ற அரசியலை கைவிட வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், இந்துக்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு பாஜக எதிரான கட்சி. பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சிகள். இந்தியாவில் உண்மையற்ற மற்றும் நேர்மையற்ற அரசாக பாஜக தொடர்கிறது. பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தற்போது கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு சென்றுள்ளார். நிதிஷ்குமாரும் தயாராக உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீட் தேர்விற்கு எதிராக பேசுகிறார். அது அவரது கருத்து. அதனை திமுக வழியிலும், காங்கிரஸ் வழியிலும் தவெக தலைவர் விஜய் செயல்படுகிறது என தங்க மகன் கூறுவது அபத்தமானது. அநாகரிக அரசியல் பேசுவதை பாஜக தலைவர்கள் கைவிட வேண்டும்.

இதையும் படிங்க:"விக்கிரவாண்டி தேர்தல் நடத்த தேவையில்லை.." - அன்புமணி ராமதாஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு! - Anbumani Ramadoss

ABOUT THE AUTHOR

...view details