திண்டுக்கல்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு கலை விழா நிகழ்வு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேவராட்டம், அம்மன், காந்தாரா, கருப்பசாமி போன்ற வேடங்கள் அணிந்து மூடநம்பிக்கைகளை களைய வேண்டி நாடகங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழ்நாட்டில் மூட பழக்கவழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாமியார்களிடம் வசதி வாய்ப்பு உள்ள பிள்ளைகளை யோகா என்ற பெயரில், பயிற்சி என்ற பெயரில் மிக மோசமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
திசை திருப்ப முயற்சி: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மனிதக் கொழுப்பு, மீன் கொழுப்பு என பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புகிறார்கள். பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு என கூறி ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். மக்களுக்கு தேவையான பல பிரச்சனைகள் உள்ளது. அதனை திசை திருப்புவதற்காக நடத்தப்படுகிறது.
நிதி வழங்கவில்லை:தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. ரூ.7000 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.33 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு ரூ.5 ஆயிரத்து 263 கோடி நிதியை கொடுக்கவில்லை. ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையும் படிங்க:40 வருடக் கனவுத் திட்டமான "சென்னம்பட்டி கால்வாய்" - ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!