தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது! - COIMBATORE POCSO CASE

கோயம்புத்தூரில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

உக்கடம் காவல் நிலையம்
உக்கடம் காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2025, 7:35 PM IST

கோயம்புத்தூர்:சமூக வலைத்தளம் மூலம் பழகிய சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கோவை கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற 17 வயது சிறுமி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பயந்து போன பாட்டி அவரது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் மறுநாள் சிறுமி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. சிறுமி வீடு திரும்பிய தகவலை அவரது பாட்டி காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அச்சிறுமி தந்த தகவல் போலீசாரை திடுக்கிட வைத்தது. காவல்துறை விசாரணையில் கிடைத்த தகவலின்படி, 17 வயது சிறுமி சமூக வலைதளம் மூலம் சில இளைஞர்களுடன் பழகி இருக்கிறார். இந்நிலையில் இளைஞர்கள் அச்சிறுமியை குனியமுத்தூர் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டம்; பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் அறிமுகம்!

பின்னர் இளைஞர்கள் தங்கியுள்ள அறைக்கு அழைத்துள்ளனர். அங்கு வந்த சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் பயந்து போன பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த உக்கடம் போலீசார் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏழு மாணவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும். ஆர்.எஸ். புரம் அனைத்து மகளீர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அந்த சிறுமி சமூக வலைதளத்தில் உல்லாசமாக இருக்க தன்னுடைய செல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்ததை அடுத்து அந்த மாணவர்கள் சிறுமியை தங்களின் அறைக்கு வரவழைத்துள்ளனர். இரவு கால தாமதமானதால், சிறுமி வீட்டுக்கு செல்லவில்லை. காலையில் சிறுமி வீடு திரும்பியது குறித்து விசாரிக்க சென்ற நிலையில் இந்த தகவல் வெளிவந்தது. மேலும் சிறுமிக்கு 18 வயது அடைய இன்னும் நான்கு மாதங்கள் உள்ளதால், சம்பந்தப்பட்ட இனைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். இச்சம்பவம் குறி்த்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது." என்று போலீசார் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details