சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில், காவல்துறை சார்பில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமாெழியை வாசிக்க, கல்லூரி மாணவர்கள் பின் தொடர்ந்து உறுதிமொழியை கூறினர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாணவர்களுடன் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.
இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சவர் தலைமையில் இன்று நடத்தப்பட்டது. திமுக கட்சி அரசுக்கு வந்ததில் இருந்து, ”போதை பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு” என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறது.
இதில் 2022 ஆகஸ்ட் 10 அன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு, போதை பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு, போதை பொருள் நடமாட்டமற்ற தமிழ்நாடு என்கிற புதிய பாதை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம்.
இதுதொடர்பாக முதலமைச்சர் பல்வேறு தீர்மானங்களை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் தான் கடந்த 2022 அம் ஆண்டு ஆனஸ்ட் 11 ஆம் தேதி , முதல்முறையாக தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி கல்லூரிகளில் பயிலும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் போதைப்பொருள் தடுப்பிற்கான மாபெரும் தொடக்கமாக இருந்தது. இந்த முயற்சி (ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்) உலக சாதனையாக படைக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று இந்த உறுதிமொழி நிகழ்ச்சி 70 லட்சம் மாணவர்கள் பங்கேற்ப்புடன், மிண்டும் உலக சாதனையை படைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டடின் உறுதிமொழி நாள் ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டப்படும் நிலையில், அது ஞாயிற்றுகிழமையாக இருந்த காரணத்தால் இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 37,592 அரசு பள்ளிகள், 8329 அரசு உதவி பெறும் பள்ளிகளிகள், 11,443 தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 57,364 பள்ளிகளில் ஏறத்தாழ 1 கோடி மாணவர்கள் பங்கேற்கும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.