கோயம்புத்தூர்:கோவை வெள்ளலூர் குளக்கரையை ஒட்டி பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் 103 வகையான பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ்நாட்டில் உள்ள 31 விழுக்காடு பட்டாம்பூச்சிகள் இப்பகுதியில் உள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த பூங்காவில் 18 அடி உயர பட்டாம்பூச்சி வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு பட்டாம்பூச்சிகள் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நீர் மேலாண்மைக்காக செய்த பல்வேறு குறிப்புகளும், ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு, நீர் மேலாண்மை திட்டம் வகுத்த மன்னர், வீர ராஜேந்திரன் பற்றிய குறிப்பு, பாரதியார் கவிதை, திருவள்ளுவரின் திருக்குறள், சோழ மன்னர் முதலாம் ராஜராஜன், வேந்தன் பாரி ஆகியோர் நீர் மேலாண்மைக்காகவும், விவசாயம், விவசாயிகளுக்கு சென்ற செயல்கள் குறிப்புகளாகவும், ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
அதேபோல் இங்கு தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டு, மேற்தொடர்ச்சி மலை பற்றிய குறிப்புகள், பட்டாம்பூச்சிகள் பற்றி சுவாரசிய தகவல்களையும், பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி முறை பற்றியும், எழுதப்படுள்ளனர். மேலும் நடைபாதையில் இரு புறங்களிலும் பல்வேறு வகையான பட்டாம்பூச்சி ஓவியங்கள் புகைப்படங்கள், அதன் அறிவியல் பெயர் குறிப்பிடப்படுள்ளன.