கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் சூலுார், வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சிப்காட் விண்ணப்பித்துள்ளது.
ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், தமிழக அரசு கோவையை ஆடை உற்பத்தி, மேட்டார் பம்பு, இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.