தமிழ்நாடு

tamil nadu

"கொங்கு மக்களுக்கு நேர்ந்த அவமானம்" - பொங்கி எழுந்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் - annapoorna srinivasan issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 8:19 AM IST

அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன்(coimbatore annapoorna srinivasan) விவகாரத்தில் கோவை மக்களை பாஜக அரசு அவமானப்படுத்தியுள்ளதாக கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கணபதி ராஜ்குமார்
திமுக எம்பி கணபதி ராஜ்குமார் (Credit - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:கோவையில் கடந்த புதன்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜிஎஸ்டி(GST) வரியை எளிமைப் படுத்துவது தொடர்பாக அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் பேசிய வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பதிவிட்டு பலரும் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த நிலையில், வியாழன் இரவு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்ட நிலையில் பெரும் சர்ச்சையானது.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை பத்தியாளர்கள் மன்றத்தில் திமுக எம்பி கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு தமிழில் அழகாக தமது கோரிக்கையை எடுத்து வைத்து பேசிய நிலையில் அதனை ஏற்காத பாஜகவினர், அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிங்க:நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு.. "இரவு முழுவதும் தூக்கமே இல்லை" என வேதனை

தொடர்ந்து பேசிய கணபதி ராஜ்குமார், சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி மூலம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பிஸ்கட்டிற்கு 18% ஜி.எஸ்.டி, ஆனால் தங்கத்திற்கு 3% ஜி.எஸ்.டி விதித்ததில் இருந்தே அறிந்துகொள்ளலாம் பாஜக யாருக்கான ஆட்சி என விமர்சித்த அவர், அன்னபூர்னா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா? எனவும் அது தனி மனித சட்ட விதி மீறல் எனவும் தெரிவித்தார்.

அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுவதால் அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப் படுத்தியது போல் உள்ளது என்றும், அன்னபூர்ணா சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.

மேலும், ஜிஎஸ்டி-யால் 30 விழுக்காடு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் விமர்சித்த கணபதி ராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு தொழில் அமைப்பினர் குறைதீர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details