மக்களவைத் தேர்தல் 2024; மான்செஸ்டர் நகரமான கோவையைக் கைப்பற்றிய திமுக! - LOK SABHA ELECTION RESULTs 2024
Coimbatore Lok Sabha Election Results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அபார வெற்றி பெற்றார். மேலும், கோயம்புத்தூரில் பதிவான வாக்குகளின் விவரங்களைக் காணலாம்...
வெற்றி பெற்ற சான்றிதழை கைப்பற்றிய கணபதி ராஜ்குமார் (credits - ETV Bharat Tamil Nadu)
கோயம்புத்தூர்:கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட 118068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணையதள விவரம்..
வ.எண்
வேட்பாளர்கள்
கட்சி
பெற்ற வாக்குகள்
1
கணபதி ராஜ்குமார்
திமுக
5,68,200
2
அண்ணாமலை
பாஜக
4,50,132
3
சிங்கை ராமச்சந்திரன்
அதிமுக
2,36,490
4
கலாமணி ஜெகநாதன்
நாதக
82,657
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரிதும் கவனிப்புக்குள்ளான தொகுதியாக கோவை மக்களவைத் தொகுதி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதே இந்த கவனிப்புக்கு காரணமாகும். அண்ணாமலையை வென்றே தீருவது என்ற முடிவுடன் களமிறங்கிய திமுக, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக களமிறக்கியது. அதிமுக சார்பில் ஐ.டி. விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
கோவை தெற்கு நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது அவர் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
கோவைதெற்கு நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி பாஜக வேட்பாளர் அண்ணாமலை 32909 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 184856 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
கோவை நாடாளுமன்ற மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 3வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 19005 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இதுவரை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 80,040 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 61,035 வாக்குகளும் அதிமுக வேட்பாளர், சிங்கை ராமச்சந்திரன் 33,583 வாக்குகளும் பெற்றனர்.
கோவையில் திமுக வேட்பாளார் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
கோவை தெற்கு இரண்டாம் சுற்று முடிவில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,546 வாக்குகள் முன்னிலை வகித்தார். திமுகவை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 1,600 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 164 வாக்குகளும் பெற்றனர்.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்தார்.
2019 தேர்தலில் வென்றது யார்?:இத்தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிட்டார். அவர் மொத்தம் 5,71,150 வாக்குகளை பெற்றதுடன், 1.75 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அவருக்கு அடுத்ததாக. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 (31.47%) வாக்குகளை பெற்றார். தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 1,45,104 வாக்குகளை அள்ளினார்.