தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! - Savukku Shankar remand extends - SAVUKKU SHANKAR REMAND EXTENDS

Savukku Shankar remand extends: யூடியூபர் சவுக்கு சங்கர் கஸ்டடி இன்றுடன் முடிவடைந்த நிலையில், நீதிமன்றக் காவலை மே 28ஆம் தேதி வரை நீட்டித்து கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Savukku Shankar Photo
Savukku Shankar Photo (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 6:48 PM IST

கோயம்புத்தூர்: கடந்த மே 4ஆம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரால் யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்து, பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின் சவுக்கு சங்கர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. தனது கைகளை சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் உடைத்ததாகவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத் தாக்கல் செய்த நிலையில், நேற்று அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, ஒருநாள் கஸ்டடி வழங்கி அனுமதி அளித்தார். இந்த நிலையில், இன்று (மே 14) மாலையுடன் கஸ்டடி முடிந்ததைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவலை மே 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும், தன்னை மெண்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்று மாறும் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அதனை மனுவாக அளிக்கும் படியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர், சவுக்கு சங்கரை காவல்துறையினர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:'திறந்தவெளியில் கட்டுமானப் பணிகள் கூடாது' - வெயில் காரணமாக அதிரடி உத்தரவு - Extreme Heat Wave In TN

ABOUT THE AUTHOR

...view details