கோயம்புத்தூர்:கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து மயூரா ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்று கோவை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், "கோவை மாவட்ட கமிட்டியில் நான்கு தொகுதிகள் உள்ளது. சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு கவுண்டம்பாளையம் ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளது. அதற்கு உட்பட்ட நிர்வாகிகள் தான் இதில் கலந்து கொண்டுள்ளோம்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இல்லை. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் இல்லை. இத்தகைய சூழலில் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றி, கட்சியை வளர்த்தன் விளைவுதான் தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஜெய்த்துள்ளோம் . பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல் இருந்ததை இன்று ஒரு 100 சீட்டுகள் வரும் அளவிற்கு செய்துள்ளோம்.
காங்கிரஸ் நிர்வாகி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேசத்தின் மீது பற்று கொண்டு ராகுல் காந்தி இருக்கிறார். எனவே இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்று மாநகர் மாவட்டத்தில் இருக்கின்ற மாநில நிர்வாகிகள் ஏஏசிசி பிஇசிசி உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் சர்க்கிள் தலைவர்கள், வார்டில் இருப்பவர்கள் எல்லாம் தொடர்ந்து நான்கு வருடங்களாக கேட்டுக் கொண்டிருந்தோம்.
இதையும் படிங்க:"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின்பும் அதிமுக போராட்டங்களை சந்தித்து வருகிறது" - நெல்லையில் ஈபிஎஸ் பேச்சு!
ஆனால் கட்சி அடிப்படைத் தொண்டர்களின் ஆதரவு இல்லாத ஜெயக்குமார் கட்சியின் வளர்ச்சிக்கு விரோதமாக இருக்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும் தனிப்பட்ட முறையில் இருக்கின்ற விருப்பு வெறுப்பின் காரணமாக சர்க்கிள் தலைவர்கள் யாரையும் தொடர்பு கொள்வதில்லை.
வார்டு தலைவர்களை தொடர்பு கொள்வதில்லை அவருக்கு வேண்டியவர்களை மட்டும் நியமித்து கட்சியை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார். இனி பொறுக்க முடியாது மேலும் தாமதமானால் இந்த கட்சி அழிந்து விடும் என்று கருதி தான் இந்த கூட்டத்தை போட்டு இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திலிருந்து 90% பேரை அவர் ஒதுக்கி வைத்துள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜெயக்குமாரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி பெருவாரியான இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் தலைவர்கள் தொண்டர்கள் செயல்வீரர்கள் மகளிர் என அத்தனை பேரும் அகில இந்திய தலைமை இடம் கூறியிருக்கிறோம்.
அதே நேரத்தில் மாநில தலைமையும் எங்களுடைய கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். டெல்லி சென்று அகில இந்திய தலைவர்களை சந்திப்பதற்கு தேதி கேட்டு அவர்களைப் பார்த்து அவர் இணைக்குமாறு கண்டிப்பாக வலியுறுத்துவோம்.
கட்சியில் கோவை மாநகர் மாவட்டத்தில் முதன்மை கட்சியாக நூற்றுக்கு 10 பேர் விகிதம் நிர்வாகிகளாக அமைத்து இரண்டு ஆண்டுகள் இலக்கு வைத்து கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை கட்சியாக இருப்பதற்கு நாங்கள் முயற்சி எடுப்போம் என தெரிவித்தார்.