கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) கோயம்புத்தூர்: பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டும், உயர்கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை பெறும் பொருட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி, பல நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் கனவுத் திட்டங்கள் எண்ணற்ற அளவில் உள்ள நிலையில், அதனை முறையாக பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்லூரி மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்கு அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அதிக அளவில் முக்கியத்துவம் தருகின்றனர். 100 சதவீதம் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா, ஆனைமலை துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:கோவை விமான நிலையத்தில் 1.22 கிலோ தங்கம் பறிமுதல்! - Gold Smuggling In Coimbatore