தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நாட்டார் தெய்வங்கள்” காலத்தால் மறைக்கப்பட முடியாத இறை வழிபாடு.. புத்தகம் வெளியிட்ட முதலமைச்சர்! - MK STALIN RELEASE BOOK ON DEITIES

CM STALIN RELEASES BOOK: தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் தனியார் குழுமம் இணைந்து தயாரித்துள்ள 'தமிழ்நாட்டின் கோட்டைகள்’ மற்றும் ’நாட்டார் தெய்வங்கள்’ பற்றி விளக்கிடும் இரண்டு நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்
நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 4:20 PM IST

சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் இரண்டு புதிய ஆங்கில நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், தனியார் குழுமமும் இணைந்து தயாரித்துள்ள ‘Forts of Tamil Nadu: A Walk-Through’ என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையும் அந்த குழுமமும் இணைந்து தயாரித்துள்ள நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை விளக்கிடும் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய ‘Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom’என்ற ஆங்கில நூல்களை வெளியிட்டார்.

கோட்டைகளும் வரலாறும்:இதில் Forts of Tamil Nadu: A Walk-Through என்ற நூல் சுற்றுலாத் துறையினர், தனியார் குழுமத்தின் எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோட்டைகளின் கட்டடக்கலை, பாதுகாப்பு சிறப்புகள், படை வலிமை, மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வர்த்தகம், அக்காலத்தின் அரசியல் நிகழ்வுகள், அவற்றை கட்டி எழுப்பியவர்களின் விவரம் மற்றும் கோட்டைகளை கைப்பற்ற நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புகளை ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாக ஆவணப்படுத்தும் 228 பக்கங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்க பட்டினம் (சத்ராஸ்) கோட்டை, ஆலம்பரை கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, கடலூர் மாவட்டம் செயின்ட் டேவிட் கோட்டை, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை, திண்டுக்கல் கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்கோட்டை, திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கோட்டை, நாமக்கல் கோட்டை, சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிருஷ்ணகிரி கோட்டை ஆகிய 17 கோட்டைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோட்டைகள் குறித்து இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் பெரும்பகுதி இன்றைய கால புகைப்படங்களைக் கொண்டிருந்தாலும், சில காப்பகப் படங்கள் வாயிலாக கோட்டைகளின் கட்டடக்கலையையும், அமைப்பையும் விவரிக்கின்றது. மேலும், இந்நூல் இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் பற்றிய புரிதலை வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டார் தெய்வமும் வழிபாட்டு முறையும்:இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் குழுமம் இணைந்து ஆங்கிலத்தில் Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom என்ற நூல் வெளியிடப்ப்பட்டது. இதில் நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள், பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை கண்ணைக் கவரும் வண்ணப் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளிலும், தன்மைகளையும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் பாரம்பரியமிக்க இத்தெய்வங்களையும் அவற்றின் வரலாற்றையும் மீட்டெடுக்க உதவும் காலப் பெட்டகம் போல் அமையப்பட்டுள்ளது. இந்நூலினை தமிழில் மொழியாக்கம் செய்யும் பணிகள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்.. மனைவி பொற்கொடிக்கு அளித்த வாக்குறுதி!

ABOUT THE AUTHOR

...view details