வேலூர்:அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். ஏ (A) வார்டில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதிக்கு, தனியாக ஒரு மருத்துவக் குழு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் தனியார் மருத்துவமனையில் மு.க.அழகிரி மகன்.. நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - mk stalin visits alagiri son - MK STALIN VISITS ALAGIRI SON
mk stalin visits alagiri son: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

mk stalin visits alagiri son
Published : Apr 2, 2024, 2:56 PM IST
mk stalin visits alagiri son
24 மணி நேரமும் மருத்துவர்கள் துரை தயாநிதியை கண்காணித்து வருகிறனர். இந்த நிலையில், முதலமைச்சரும். துரை தயாநிதியின் சித்தப்பாவுமான மு.க ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார்.