தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்தியா வெற்றி பெறும்" வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

mk stalin: சென்னை தேனாம்பேட்டை உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்துவிட்டு தான் எனது வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். இந்தியா வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

mk stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 9:47 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கியது. அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு பேரவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வாக்குச்சாவடிகளில் , அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், வாக்கு இயந்திரத்தில் மாதிரி வக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 23 இலட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் மற்றும் புதுச்சேரியில் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் காலை 7 மணி முதலே தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது,“நான் எனது வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். அதேபோல், அனைவரும் இன்று ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நீங்கள் நினைப்பது போன்று இந்தியா வெற்றி பெறும்” என்றார்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details