தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. 18 இடங்களில் கோலாகல கொண்டாட்டம்! - CHENNAI SANGAMAM FESTIVAL

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில், திரளான மக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2025, 10:38 PM IST

சென்னை:பொங்கல் திருநாளையொட்டி “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 13) தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா இன்று (ஜனவரி 14) செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு , சென்னையின் 18 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நடைபெற்றுள்ளது.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் (ETV Bharat Tamil nadu)

முதல் நாள் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற்ற இடங்கள் :

ஏகாம்பரநாதர் கோயில் திடல் - கீழ்ப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை - பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, அரசு இசைக் கல்லூரி வளாகம், கத்திபாரா சந்திப்பு - கிண்டி, ராபின்சன் பூங்கா - ராயபுரம், முரசொலி மாறன் பூங்கா - பெரம்பூர், மாநகராட்சி விளையாட்டு மைதானம் - கொளத்தூர், எஸ்.வி. விளையாட்டுத் திடல் - அம்பத்தூர், பாரத சாரண சாரணியர் திடல் - திருவல்லிக்கேணி, மாநகராட்சி விளையாட்டுத் திடல் - நுங்கம்பாக்கம்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு!

மேலும், நடேசன் பூங்கா - தி.நகர், மாநகராட்சி விளையாட்டுத் திடல் - ஜாபர்கான்பேட்டை, சிவன் பூங்கா - கே.கே.நகர், லேமேக் பள்ளி வளாகம் - வளசரவாக்கம், ஜெய் நகர் பூங்கா - கோயம்பேடு, கோபுரப் பூங்கா- அண்ணாநகர், அரசு அருங்காட்சியகம் - எழும்பூர் அகிய 18 இடங்களில் இன்று சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில், திரளாம மக்கள் கலந்துக்கொண்டு திருவிழாவை கண்டு களித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details