தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது ஜூலை 16-ல் தீர்ப்பு! - SENTHIL BALAJI ED CASE

SENTHIL BALAJI CASE UPDATE: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செந்தில் பாலாஜி - கோப்புப்படம்
செந்தில் பாலாஜி - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:47 PM IST

சென்னை:கடந்த 2023ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கபடும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் இவரா?.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! - BSP Armstrong murder case

ABOUT THE AUTHOR

...view details