சென்னை:2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில், சென்னையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயாராகி வருகின்றன.
சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் நாளை (ஜூன்4) வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரிய மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளானது, தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இரு குழு அமைத்து நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இன்று சென்னையில் மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1,055 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேர்தல் பணிகள் அனைத்தும் தொடங்குவதற்கு சென்னை தயார் நிலையில் உள்ளது என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.