தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லிங் சாலை சந்திப்புக்கு நகர்ந்த மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டப்பணிகள்! - Metro Work reaches Sterling Road - METRO WORK REACHES STERLING ROAD

CHENNAI METRO CONSTRUCTION UPDATE: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 2 வழித்தடம் 3-இல் சிறுவாணி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து, ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை வந்தடைந்ததுள்ளது.

மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டப்பணிகள்
மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டப்பணிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 9:59 PM IST

சென்னை:சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-இல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II இல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இதில் 2-ஆம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிகளுக்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டப்பணிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் வழித்தடம் 3-இல் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. நீளத்திற்கு 28 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 19 உயர்மட்ட நிலையங்களுக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமை (JICA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி (NDB) போன்ற பன்னாட்டு நிதியுதவி நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.

இதில் வழித்தடம் 3-இல் கெல்லிஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி வழித்தடம் 3-இல் கடந்த ஆண்டின் செப்டம்பர் 9 ஆம் தேதி சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து, ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 703மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து, ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை இன்று (ஆகஸ்ட் 5.2024) வந்தடைந்தது.

இதில் கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டர் ஆழத்தில் 51 மீட்டர் நீளத்தை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், டோனி புர்செல் (அணித் தலைவர் - பொது ஆலோசகர்கள்), லத்தீப் கான் (தலைமை தட நிபுணர் - பொது ஆலோசகர்கள்), சஞ்சீவ்குமார் மண்டல் (தலைமை குடியுரிமை பொறியாளர் - பொது ஆலோசகர்கள்), ஜெயராமன் (திட்டப் பொறுப்பாளர் - லார்சன் மற்றும் டூப்ரோ) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சுதந்திர தின விழாஅணிவகுப்பு ஒத்திகை; சென்னையில் இன்று துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details