சென்னை:இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
- கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தருமபுரி) தலா 6
- பையூர் AWS (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 5
- ஆம்பூர் (திருப்பத்தூர்), மேலாலத்தூர் (வேலூர்), தர்மபுரி (தருமபுரி), தர்மபுரி PTO (தருமபுரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 4
- ஒகேனக்கல் (தருமபுரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), டேனிஷ்பேட்டை (சேலம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), அரூர் (தருமபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3
- மேட்டூர் (சேலம்), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பாலவிடுதி (கரூர்), சேலம் (சேலம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), ஓமலூர் (சேலம்), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 2
- விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தருமபுரி), சோத்துப்பாறை (தேனி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), தேவாலா (நீலகிரி), கேத்தி (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பாலக்கோடு (தருமபுரி), சங்கரி துர்க்கம் (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 1.
அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.
அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5 டிகிரி செல்சியஸ் (+7.2 டிகிரி செல்சியஸ்) ஈரோட்டில் 43.2 டிகிரி செல்சியஸ் (+5.7 டிகிரி செல்சியஸ்), திருச்சியில் (விமான நிலையம்) 42.7 டிகிரி (+4.6 டிகிரி செல்சியஸ்) மற்றும் மதுரையில் (விமான நிலையம்) 42.2 டிகிரி செல்சியஸ் (+4.6 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 42.6 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 41.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், பாளையம்கோட்டையில் 41.2 டிகிரி செல்சியஸ், சேலம் மற்றும் மதுரையில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.1 டிகிரி செல்சியஸ் (+1.5 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.9 டிகிரி செல்சியஸ் (-0.5 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
மே 7: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 8: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மே 9:தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மே 10 மற்றும் மே 11:தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 12: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 13:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.