சென்னை:தமிழக உள்மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
குன்னூர் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) | 17 சென்டிமீட்டர் |
குன்னூர் PTO (நீலகிரி) | 14 சென்டிமீட்டர் |
உசிலம்பட்டி (மதுரை), மஞ்சளாறு (தேனி) | 9 சென்டிமீட்டர் |
சிவகிரி (தென்காசி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்) | 8 சென்டிமீட்டர் |
அழகரை எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மைலாடி (கன்னியாகுமரி) | 7 சென்டிமீட்டர் |
ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), தேவாலா (நீலகிரி), திருப்பூர் PWD (திருப்பூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), ஆனைமடுவு அணை (சேலம்) | 6 சென்டிமீட்டர் |
குப்பணம்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), சாத்தியார் (மதுரை), கொடைக்கானல் (திண்டுக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆழியார் (கோயம்புத்தூர்), பெருந்துறை (ஈரோடு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), க.பரமத்தி (கரூர்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அரண்மனைப்புதூர் (தேனி), நீடாமங்கலம் (திருவாரூர்), தம்மம்பட்டி (சேலம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) | 5 சென்டிமீட்டர் |
அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பைவிட குறைவாக பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 31.6 டிகிரி செல்சியஸ் (-6.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 31.3 டிகிரி செல்சியஸ் (-6.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்தமிழக உள்மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19ல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 20, 21 ஆம் தேதிகளில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.