தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. மக்கள் கடும் அவதி! - Tamil Nadu Weather Report - TAMIL NADU WEATHER REPORT

Tamil Nadu Weather Report: இன்றும், நாளையும் வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை தகவல்
Tamil Nadu Weather Report (புகைப்பட உதவி - செய்தியாளர் சாலமன்)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 5:28 PM IST

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல்லில் 5 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 7.2 டிகிரி செல்சியஸ்அதிகம்) பதிவாகியுள்ளது.
வேலூரில் 43.7 டிகிரி, ஈரோட்டில் 43.6 டிகிரி, திருச்சியில் 43.1 டிகிரி, திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தர்மபுரி மற்றும் சேலத்தில் 41.5 டிகிரி, மதுரை (நகரம் மற்றும் விமான நிலையம்) மற்றும் திருப்பத்தூரில் 41.4 டிகிரி, நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் 41.0 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 40.7 டிகிரி, கடலூரில் 40.2 டிகிரி மற்றும் பாளையம்கோட்டையில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸ் (3.5 டிகிரி செல்சியஸ் மேல்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.0 டிகிரி செல்சியஸ் (2.9 டிகிரி செல்சியஸ் மேல்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மே 2 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 3 முதல் 6 ஆம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 6 ஆம் தேதி வரையில், தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று முதல் 4 ஆம் தேதி வரையில், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று முதல் 4 ஆம் தேதி வரையிலான அடுத்த 3 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41 டிகிரி முதல் 44 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் 6 ஆம் தேதி வரையில், காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவிகதமாகவும் மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவிகதமாகவும், கடலோரப்பகுதிகளில் 50 முதல் 80 சதவிகதமாகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று மற்றும்வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 4 முதல் 6 ஆம் தேதி வரையில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 முதல்41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:இன்று முதல் 5 ஆம் தேதி வரையில், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இன்று மதியம் 1:30 மணி நிலவரம் படி தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் தொட்டு சதம் அடித்துள்ளது.

மாவட்டம் வெயிலின் அளவு (செல்சியஸ்) வெயிலின் அளவு(பாரன்ஹீட்)
சென்னை 39 டிகிரி 102.20 டிகிரி
திருவள்ளூர், திருநின்றவூர் 40.9 டிகிரி 105.63 டிகிரி
காஞ்சிபுரம் 40.7 டிகிரி 105.26 டிகிரி
விழுப்புரம் மயிலம் 38.9 டிகிரி 102.02 டிகிரி
ராணிப்பேட்டை கலவை 40.5 டிகிரி 104.90 டிகிரி
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் 41.8 டிகிரி 107.24 டிகிரி
திருப்பத்தூர் 40.2 டிகிரி 104.36 டிகிரி
திருவண்ணாமலை 39.8 டிகிரி 103.64 டிகிரி
கள்ளக்குறிச்சி 40.8 டிகிரி 105.44 டிகிரி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் 40.7 டிகிரி 105.26 டிகிரி
திருவாரூர் 39.1 டிகிரி 102.38 டிகிரி
புதுக்கோட்டை மாவட்டம் வாம்பன் 40.2 டிகிரி 104.36 டிகிரி
கரூர் மாவட்டம் கடவூர் 40.3 டிகிரி 104.54 டிகிரி
திருச்சி மாவட்டம் சிறுகமணி 39.7 டிகிரி 103.46 டிகிரி
சேலம் மாவட்டம் சந்தியூர் 40.6 டிகிரி 105.08 டிகிரி
ஈரோடு 41.5 டிகிரி 106.70 டிகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் 38.9 டிகிரி 102.02 டிகிரி
திருப்பூர் 40.1 டிகிரி 104.18 டிகிரி
கோவை 38.1 டிகிரி 100.58 டிகிரி
சிவகங்கை 40.5 டிகிரி 104.90 டிகிரி
விருதுநகர் 41.6 டிகிரி 106.88 டிகிரி
தென்காசி 37.9 டிகிரி 100.22 டிகிரி

இதையும் படிங்க:கொளுத்தும் வெயில்.. கோடைகால தீ முதல் கேஸ் சிலிண்டர் வரை.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Awareness Of Fire Accident

ABOUT THE AUTHOR

...view details