தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை - கன்னியாகுமரி பண்டிகை கால சிறப்பு ரயில் -நாளை முன்பதிவு தொடக்கம்! - CHENNAI KANYAKUMARI SPECIAL TRAIN

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு நாளை முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் (கோப்புப்படம்)
ரயில் (கோப்புப்படம்) (credit - Southern Railway X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2024, 10:17 PM IST

மதுரை:கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு நாளை முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06039) டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06040) டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 01 ஆகிய புதன்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன குறைந்த கட்டணங்கள் மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details